உள்நாடு

“ஒரு நாடு, ஒரே சட்டம்” – ஜனாதிபதியிடம்

(UTV | கொழும்பு) – “ஒரு நாடு, ஒரே சட்டம்” ஜனாதிபதி செயலணியின் அறிக்கை வண. கலகொட அத்தே ஞானசார தேரரினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

“இலங்கைக்குள் ஒரே நாடு; ஒரே சட்டம் என்ற எண்ணக்கருவைச் செயற்படுத்தல்” நடவடிக்கைக்காக நிறுவப்பட்டுள்ள ஜனாதிபதிச் செயலணி எதிர்பார்க்கும் இலக்குகளை அடைய, அதன் உறுப்பினர்களுடன் இணைந்து அயராது உழைக்க உறுதிபூண்டிருந்தனர்.

ஓர் அடிப்படைக் கொள்கைக் கட்டமைப்புக்குள் இருந்து அந்தப் பாத்திரத்தை நிறைவேற்றுவதோடு, எந்தவொரு குடிமகனும், இனம், மதம், சாதி அல்லது வேறு ஏதேனும் காரணிகளின் அடிப்படையில் சட்ட வேறுபாடுகளுக்கோ அல்லது வேறு விடயங்களிலோ பாகுபாடுகளுக்கு உள்ளாகக் கூடாது என்றும் குறித்த செயலணியின் தலைவர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இரத்த தான திட்டங்களுக்கு ஆதரவளிக்கவும்

திலினி – இசுறு தொடர்ந்தும் விளக்கமறியலில்

திருகோணமலையில் நல்வழிப்படுத்தல் விழிப்புணர்வு செயலமர்வு!