அரசியல்உள்நாடு

ஒரு இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் ரணில் வெற்றி பெறுவார் – செந்தில் தொண்டமான்

தமிழ், சிங்களம் என அனைத்து மக்களும் இணைந்து அதிகூடிய வாக்குவித்தியாசத்தில் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்வதில் உறுதியாகவுள்ளனர் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

இன்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் பேசும் மக்கள் வாழும் மாவட்டங்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒரு இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். மக்கள் ஜனாதிபதி மீது அளவுக்கதிகமான நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.

நாம் செல்லும் அனைத்து இடங்களிலும் ஒருமனதாக அவருக்கு ஆதரவை வெளிப்படுத்துகின்றனர்.

அதற்கான காரணம் குறித்து வினவிய போது, 21 ஆம் திகதியின் பின்னர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வரிசைகளில் நிற்பதற்கு தாம் விரும்பவில்லை என்று மக்கள் கூறுகின்றனர்.

பொருளாதாரம் படிப்படியாகவே வளர்ச்சியடைந்து வருகிறது. எனவே இந்த சந்தர்ப்பத்தில் மாற்றமொன்று ஏற்பட்டால் அதனால் ஏற்படக் கூடிய சுமை மக்கள் மீதுதான் சுமத்தப்படும்.

தமிழ், சிங்களம் என அனைத்து மக்களும் இணைந்து அதிகூடிய வாக்குவித்தியாசத்தில் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்வதில் உறுதியாகவுள்ளனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும். ஜனாதிபதியின் வெற்றிக்காக முன்னின்று கடமையாற்றிக் கொண்டிருக்கின்றோம் என தெரிவித்தார்.

Related posts

தடுப்பூசிகளை இந்த இடங்களில் இன்று பெற்றுக் கொள்ளலாம்

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகள்

கொரோனா தொடர்பில் வதந்திகளை பரப்பியோருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்