(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸின் புதிய திரிபான ஒமிக்ரோன் வைரஸ் நாட்டுக்குள் நுழைவதைத் தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், ஒமிக்ரோன் வைரஸ் நாட்டுக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் 6 நாடுகளின் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.
வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தொடர்பில் கண்காணிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.