அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

ஒன்றரை மணி நேரம் வாக்குமூலம் – கோட்டாபய ராஜபக்ஷ CIDயில் இருந்து வெளியேறினார்

இன்று முற்பகல் (17) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) ஆஜரான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கதிர்காமம் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பில் வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அழைப்பு விடுத்திருந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி இன்று காலை திணைக்களத்தில் ஆஜராகியிருந்தார்.

இதன்போது, சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

யார் பேச அஞ்சினாலும் பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்தும் மனிதாபிமானமற்ற தாக்குதலை கண்டிக்கிறோம் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

பொலிஸ் விசேட அதிரடிப் படையின் புதிய கட்டளை தளபதியாக வருண ஜயசுந்தர

22 இந்தியர்கள் அதிரடியாக கைது!