உள்நாடு

ஒட்சிசன் விநியோகம் வழமைக்கு

(UTV | கொழும்பு) – கொடுப்பனவுகள் தாமதமான காரணத்தால், அனுராபுரம் வைத்தியசாலை உள்ளிட்ட சில இடங்களில் ஒட்சிசன் விநியோகத்திற்கு இடையூறு ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது நிலைமை வழமைக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது ஒட்சிசன் விநியோகம் சீராக முன்னெடுக்கப்படுவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் இன்று (01) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

கடந்த 29 ஆம் திகதி அனுராதபுரம் வைத்தியசாலை மற்றும் மெத்சிறி செவன கொவிட் சிகிச்சை நிலையத்திற்கு ஒட்சிசன் விநியோகிக்கும் சிலோன் ஒட்சிசன் நிறுவனம் ஒட்சிசன் விநியோகத்தை நிறுத்தியது.

Related posts

16,000 ஆசிரியர்களை நியமித்து பற்றாக்குறை தீர்க்கப்பட்டுள்ளது 

செங்கடலிற்கு கப்பலை அனுப்ப தயாராகவுள்ளோம்- கடற்படை பேச்சாளர்

சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடும் பாராளுமன்ற சிறப்புரிமை குழு!