உள்நாடு

ஐ.ம.சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் வௌிநடப்பு

(UTV | கொழும்பு) – மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகரவின் பதவிப்பிரமாணத்தினையடுத்து ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபை நடவடிக்கையை புறக்கணித்து வெளிநடப்புச் செய்துள்ளனர்.

மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகர மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அனுமதியின் அடிப்படையில் இன்று பாராளுமன்றத்தில் கலந்து கொண்டிருந்தமைக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.

இதன்போது பாராளுமன்றத்தில் பெரும் அமளிதுமளிக்கு மத்தியில் அவரது பதவிப்பிரமாணம் இடம்பெற்றது.

Related posts

பிரதமரின் கடிதத்திற்கு எதிர்கட்சித் தலைவர் பதில் கடிதம்

புராதன கட்டடம் : விசாரணை அறிக்கையினை பிரதமரிடம் கையளிப்பதில் தாமதம்

சுகாதார அமைச்சராக கெஹெலிய, பவித்ராவுக்கு போக்குவரத்து அமைச்சு