விளையாட்டு

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் காலவரையின்றி ஒத்தி வைப்பு

(UTVNEWS | கொவிட் – 19) – ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டால் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாடு தழுவிய ஊரடங்குச் சட்டத்தை மே மாதம் 3 ஆம் திகதி வரை நீடிக்கும் என அறிவித்த சிறிது நேரத்திலேயே, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI) வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை  (14) இவ்வாண்டுக்கான ஐ.பி.எல்  தொடர்தற்போதைக்கு ஒத்திவைக்கப்படும் என அறிவித்துள்ளது.

இந்த நேரத்தில் ஐபிஎல் 2020யின் எதிர்காலம் குறித்து எந்த தெளிவும் இல்லை என்றும் BCCI அதிகாரிகள் மே 3 ஆம் திகதிக்கு பிறகு நிலைமையை மறுஆய்வு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது கொரோனா வைரஸ் நெருக்கடி தொடர்பாக மையம் புதிய வழிகாட்டுதல்களை வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த வீரர்

ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்றுத் தீர்ந்த கிரிக்கெட் நுழைவுச் சீட்டுகள்!

இலங்கை அணி சகல துறைகளிலும் திறமை காட்டியுள்ளது – தினேஷ் சந்திமால்