விளையாட்டு

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் களமிறங்கும் லசித் மாலிங்க…

(UTV|COLOMBO) இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளார்.

இவர் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடவுள்ள இரண்டாம் மற்றும் மூன்றாவது போட்டிகளில் பங்கேற்கவுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

லசித் மாலிங்க தென்னாபிரிக்காவிலிருந்து நேரடியாக இந்தியாவுக்கு செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், அவர் இலங்கைக்கு வருகை தந்ததன் பின்னரே இந்தியாவுக்கு செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, எதிர்வரும் 28 ஆம் திகதி பெங்களூரு ரோயல் செலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் எதிர்வரும் 30ஆம் திகதி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியிலும் லசித் மாலிங்க மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.

 

 

 

Related posts

IPL ஏலத்தில் இசுறு உதான

மெஸ்ஸியும் ரொனால்டோவும் மோதிக்கொள்ளும் கால்பந்தாட்டப்போட்டி இன்று

மகளீருக்கான உலக கிண்ண போட்டிகளின் நேற்றைய முடிவுகள்