அரசியல்உள்நாடு

ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றினார் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்

தலைவர் அவர்களே, இப்பேரவையின் தலைவராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டமை குறித்து, எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற தேர்தல்களில், இலங்கை மக்கள், நாட்டை பொருளாதார, சமூக மற்றும் அரசியல் மாற்றத்தை நோக்கி வழிநடத்துவதற்கு, வலுவானதொரு ஆணையுடன் கூடிய புதிய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுத்தனர் எனவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அமைச்சர் விஜித ஹேரத் தொடர்ந்து உரையாற்றுகையில்…..

இத்தேர்தல்களின் முடிவுகள் நாட்டின் அனைத்துப் பகுதிகள், இனங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த மக்களிடமிருந்துமான ஒன்றுபட்ட குரலைப் பிரதிபலிக்குமாறு அமைந்தன.

தற்போதைய பாராளுமன்றமானது, இலங்கை வரலாற்றில் இரண்டு மலையக சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் ஒரு பார்வைக் குறைபாடுள்ள நபர் ஆகியோரைக்கொண்டதும், அனைத்து தரப்பினரையும் பிரதிநித்துவப்படுத்துவதுமான ஒன்றாவதுடன், இம்முறை அதிக எண்ணிக்கையிலான பெண்களைக்கொண்டதுமாக அமைந்துள்ளது.

பாலினம், இனம் அல்லது ஏனைய காரணிகளைப் பொருட்படுத்தாமல், நாட்டின் அனைத்து மக்களின் உரிமைகளையும் நிலைநிறுத்துவதில் கவனம் செலுத்தும், இலங்கையின் புதிய பாதையை இவ்வுள்ளடக்கம் பிரதிபலிக்கிறது.

பொருளாதார நெருக்கடி மக்கள்தொகையின் அனைத்துப் பிரிவுகளையும், குறிப்பாக ஏழ்மையான மற்றும் நலிவானவர்களை பெரிதும் பாதித்தது.

பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திப்படுத்தலைத் தொடர்ந்து, நியாயமான வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் பொருளாதார மாற்றம் மற்றும் சிறப்பான பொருளாதார ஜனநாயகமயமாக்கலுக்கான அடித்தளத்தை அமைக்கும் பணியில் அரசாங்கம் தற்போது ஈடுபட்டுள்ளது.

நமது மக்கள், குறிப்பாக நலிவடைந்த சமூகம் மீது பொருளாதார சவால்களின் தொடர்ச்சியான தாக்கத்தை நாங்கள் நன்கு அறிவதுடன், அவர்களின் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை மேம்படுத்த தற்போது, தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

நாம், 2025 ஆம் ஆண்டுக்கான தேசிய பாதீட்டில், சமூக நலன் மற்றும் பாதுகாப்பிற்கான அதிகரித்த ஒதுக்கீடு உட்பட மக்களுக்கு மிகவும் தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கான, தொடர் நடவடிக்கைகளுக்கு உறுதியளித்துள்ளோம்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சமூக-பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துவதற்கும், மீள்குடியேற்றம், வீடளித்தல், இழப்பீடு மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாடு போன்ற முக்கியமான தேவைகளை நிவர்த்தி செய்வதற்குமான சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஜனவரி முதலாம் திகதி ஜனாதிபதியால் தொடங்கப்பட்ட, “தூய்மையான இலங்கை” திட்டத்தின் மூலம், அரசாங்கம் ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தையும் தார்மீக மற்றும் நெறிமுறை நிர்வாகத்திற்கான அர்ப்பணிப்பையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

அரசாங்கமானது, ஒருமைப்பாட்டை முன்னுரிமைப்படுத்துவதுடன், தவறான முகாமைத்துவம் மற்றும் ஊழல் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள ஜனநாயகம், சுதந்திரத்தின் அடிப்படையானதும், பழமைவாய்ந்ததுமான கொள்கைகள் மதிக்கப்படுவதுடன், பாதுகாக்கப்படும் அதேவேளை, அனைத்து குடிமக்களின் மனித உரிமைகளையும் பாதுகாக்கும். இந்நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டே, நிர்வாக, அரசியல் மற்றும் தேர்தல் செயன்முறைகள் செயற்படுத்தப்படும்.

தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேலும் முன்னேற்றுவதற்கு தீவிரமானதும், கட்புலனாவதுமான நடவடிக்கைகளை எடுப்பதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

சீராக்கப்பட்ட இலங்கை மற்றும் சமூகங்களுக்கு இடையிலான இடைவெளிகளைக் குறைப்பதற்கான எமது, தொலைநோக்குக்கு ஏற்ப, இலங்கை தினத்தை அறிவிக்க ஜனாதிபதி முன்மொழிந்துள்ளார்.

முரண்பாடுகள் தவிர்த்த, ஏனைய எஞ்சியுள்ள சவால்களை எதிர்கொள்ள நிறுவப்பட்ட உள்நாட்டு செயன்முறைகள் சுயாதீனமான மற்றும் நம்பகமான முறையில் தங்கள் பணிகளைத் தொடரும் என்பதை நாம் உறுதி செய்வோம்.

காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீட்டு அலுவலகம் மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் போன்ற உள்நாட்டு நிறுவனங்கள் மேலும் பலப்படுத்தப்படும்.

அனைத்து இலங்கையர்களின் நம்பிக்கையையும் பெறும் செயன்முறையொன்றை உறுதி செய்வதற்காக, உண்மை மற்றும் நல்லிணக்கக் கட்டமைப்பின் வரையறைகள், பங்குதாரர்களின் சாத்தியமான மிகப்பரந்த பிரிவினருடன் மேலும் விவாதிக்கப்படும்.

உள்நாட்டு பொறிமுறைகளை அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள் நம்பகமானதாகவும், உறுதியானதாகவும் மாற்றுவதே எமது நோக்கமாகும்.

இலங்கை சமூகத்திற்குள் பதட்டங்களை ஏற்படுத்தும் வன்முறைச் செயற்பாடுகளை விசாரிக்க உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையத்திற்கு அதிகாரம் அளிக்கப்படும்.

மக்களின் ஆணையுடன், நீதியானதும், நியாயமானதும் மற்றும் வளமானதுமான சமூகத்திற்கான அவர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கான பொறுப்பை அரசாங்கம் முழுமையாக அறிந்திருக்கிறது.

தேசிய ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கி நாம் பாடுபடும்போது, ​​சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான ஊக்கமளித்தலும், ஆதரவும் முக்கியமானதாக இருக்கும்.

இலங்கையானது, ஐக்கிய நாடுகள் சபையின் தீவிர உறுப்பினராகவும், அனைத்து முக்கிய மனித உரிமை தொடர்பிலான ஆவணங்களிலும் தரபோன்றாகவும் உள்ளது. ஒப்பந்த அமைப்புகள் மற்றும் சிறப்பு நடைமுறைகளுடன் நாங்கள் தொடர்ந்து ஈடுபாட்டுடன் செயற்படுகிறோம்.

கடந்த சில ஆண்டுகளில், 10க்கும் மேற்பட்ட சிறப்பு வருகைகள் இடம்பெற்றுள்ளதுடன், மிகச்சமீபத்தில் பெண்களுக்கு எதிரான பாடுபட்டு ஒழிப்புக்குழு (CEDAW), சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கை (ICCPR) மற்றும் உலகளாவிய காலமுறை மீளாய்வு (UPR) போன்ற ஒப்பந்தங்களுடன் வினைத்திறனாக ஈடுபட்டுள்ளோம்.

தொடர்ச்சியான மற்றும் ஆக்கபூர்வமான ஈடுபாட்டின் மூலம் மனித உரிமைகள் குறித்த உண்மையான பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒத்துழைப்புக்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

உலகளாவிய தன்மை, பாரபட்சமற்ற தன்மை, புறநிலை மற்றும் தேர்ந்தெடுக்காத தன்மை ஆகியவற்றின் ஸ்தாபகக் கொள்கைகளுக்கு ஏற்ப, சமச்சீரானதும், முழுமையானதுமான முறையில் அழுத்தம் விளைவிக்கும், உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் இச்சபையை ஆதரிக்க இலங்கை தயாராக உள்ளது.

வலுவான தேசிய மனித உரிமை கட்டமைப்புகள் மூலம், தங்கள் சவால்களை எதிர்கொள்ள நாடுகள் ஊக்குவிக்கப்பட்டு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

எங்கள் தேசிய சட்ட கட்டமைப்பிற்குள் ஐக்கிய நாடுகள் மற்றும் இச்சபையுடன் ஆக்கபூர்வமான உரையாடல் மற்றும் ஒத்துழைப்புடன் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மேலும் தெரிவித்தார்.

Related posts

ஜனவரி முதல் வாகனங்களை இறக்குமதி!

பொதுத் தேர்தல் : மட்டக்குளி – அளுத்மாவத்தை மக்களின் குரல்களும் குறைகளும்… [VIDEO]

ஜோசப் ஸ்டாலினுக்கு ஆதரவாக மேரி லோலர்