உலகம்

ஐ.நா. பொது செயலாளர் இராஜினாமா செய்ய வேண்டும் – இஸ்ரேல் கோரிக்கை.

(UTV | கொழும்பு) –

18-வது நாள் தாக்குதலுக்கு பிறகு இருதரப்பிலும் பலியானோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தைக் கடந்துள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவிக்கையில்,

இஸ்ரேலின் தொடர் குண்டு வீச்சு பெரும் அபாய ஒலியை ஏற்படுத்துகின்றது. சர்வதேச மனித உரிமை சட்டம் இப்போரில் மீறப்படுவது வருத்தம் அளிக்கின்றது. 10 இலட்சத்திற்கும் மேற்பட்டோரை வடக்கு காசாவில் இருந்து தெற்கு காசாவிற்கு இடம் பெயருமாறு தெரிவித்து, அங்கும் இஸ்ரேல் குண்டு வீசுகிறது. 56 ஆண்டுகளாக பலஸ்தீன மக்கள் ஆக்கிரமிப்பு, உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். காரணங்களின்றி ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலை தாக்கவில்லை. ஹமாஸ் போராளிகளின் தாக்குதலுக்காக பலஸ்தீன மக்களுக்கு தண்டனை வழங்குவதை நியாயப்படுத்த முடியாது என தெரிவித்தார்.

இவரின் இந்த கருத்திற்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக, ஐ.நா.விற்கான இஸ்ரேல் தூதர் கிலாட் இர்டான் தெரிவிக்கையில், ‘ஹமாஸ் போராளிகள் தாக்குதலை ஐ.நா. பொதுச்செயலாளர் பொறுத்து கொண்டு நியாயப்படுத்துகிறார். அவர் பதவி விலக வேண்டும்’ என தெரிவித்தார். அதேபோல், ஐ.நா. பொதுச்செயலாளர் மன்னிப்பு கேட்க வேண்டும் என இஸ்ரேல் அமைச்சர் கோஹன் தெரிவித்துள்ளார்.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

சொகுசு கப்பலில் மொத்தம் 174 பேருக்கு கொரோனா வைரஸ்

போகோ ஹரம் அமைப்பின் தலைவர் மரணம்