உலகம்

ஐ.நா. சபையின் மனித உரிமைகள் அமைப்பில் இருந்தும் வெளியேறிய ரஷ்யா!

(UTV | கொழும்பு) –

உக்ரைன் உடனான ரஷ்யா போர் ஆரம்பத்தில் இருந்தே பல்வேறு அங்கீகாரங்களை ரஷ்யா இழந்த நிலையில். மேலும் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் அமைப்பில் இருந்தும் வெளியேற்றப்பட்டது.
இதில் தன்னை இணைத்துக்கொள்ள ரஷ்யா போராடி வந்தாலும் அதில் தோல்வியை மட்மே சந்தித்தது.இந்நிலையில் மனித உரிமைகள் அமைப்பின் 2024-26 ஆண்டிற்கான உறுப்பினர்கள் தேர்தல் ஐ.நா. சபையில் நடந்தது. கிழக்கு ஐரோப்பா பிராந்தியத்திற்கான ஒதுக்கப்பட்ட 2 இடங்களுக்கு ரஷ்யா, பல்கேரியா, அல்பேனியா ஆகியவை போட்டியிட்டன.

ஐ.நா பொதுச்சபையை சேர்ந்த உறுப்பினர் நாடுகளை முன்னிறுத்தும் வகையில் 193 பிரதிநிதிகள் இரகசிய வாக்கெடுப்பில் கலந்து கொண்டனர்.இதில் பல்கேரியாவிற்கு ஆதரவாக 160 வாக்குகளும், அல்பேனியாவிற்கும் ஆதரவாக 123 வாக்குகளும் கிடைத்தன.
ரஷ்யாவிற்கு ஆதரவாக 83 வாக்குகளை மாத்திரம் பெற்று கொண்டது. இதனால் ஐ.நா. சபையின் மனித உரிமை அமைப்பில் இடம்பெறும் ரஷ்யாவின் முயற்சி மீண்டும் தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இந்தோனேசியாவில் 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு – ஏழு மாநிலங்களில் அவசரகால நிலை

editor

இலங்கை – இந்தியா கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்!