உள்நாடுசூடான செய்திகள் 1

ஐ.தே.க. உறுப்பினர்கள் இடைநீக்கம் : மனு நிராகரிப்பு

(UTV | கொழும்பு) – கட்சி உறுப்பினர்களின் 99 பேரை இடைநிறுத்த ஐக்கிய தேசியக் கட்சி எடுத்த முடிவுக்கு தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என முன்வைக்கப்பட்டிருந்த மனுவினை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று(22) நிராகரிப்பு செய்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் கீழ் வேட்பு மனுக்களை தாக்கல் செய்த 99 ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமையை நீக்க ஐக்கிய தேசியக் கட்சி செயற்குழு அண்மையில் முடிவு செய்தது.

இந்நிலையில் அக்கட்சியின் செயற்குழு எடுத்த முடிவினை தடுத்து இடைக்கால தடை உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு கோரி, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மனு ஓன்றினை தாக்கல் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்த முன்னாள் எம்.பி லலித் எல்லாவல

editor

நுரைச்சோலையில் குழந்தை கிணற்றில் விழுந்து உயிரிழப்பு

அளுத்கம – தர்கா நகரை சுற்றி விசேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுப்பு