உள்நாடுசூடான செய்திகள் 1

ஐ.தே.கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று

(UTV|கொழும்பு)- ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று(10) நடைபெறவுள்ளது.

கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் மாலை 4 மணிக்கு கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இங்கு கலந்துரையாடப்படவுள்ளது.

இதன் பிரகாரம், புதிய முன்னணியின் பொதுச் செயலாளராக பெயரிடப்பட்டுள்ள ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு கட்சி செயற்குழுவின் அனுமதி கிடைக்கப்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கொழும்பை நோக்கி வரும் ஐக்கிய தேசிய கட்சியினரின் வாகன எதிர்ப்பு பேரணி

பல பொருட்களின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை தகர்க்க நடவடிக்கை

𝐄𝐱𝐜𝐥𝐮𝐬𝐢𝐯𝐞: ஜனாதிபதியின் பதவிக்கால மனு: வழக்கில் நடந்தது என்ன? (முழு விபரம் )