சூடான செய்திகள் 1

ஐஸ் ரக போதை பொருளுடன் ஒருவர் கைது

(UTVNEWS|COLOMBO) – ஐஸ் ரக போதை பொருளை நாட்டிற்கு கொண்டு வந்த இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று(19) அதிகாலை சென்னையிலிருந்து இலங்கை வந்துள்ள 29 வயதுடைய நபரே, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது பயண பொதியில் இருந்து சுமார் 86 லட்சத்து 42 ஆயித்துக்கும் அதிக பெறுமதியான 864 கிராம் ஐஸ் ரக போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த கைது செய்யபட்ட நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள கோரிக்கை

குடிநீர் போத்தல்கள் தொடர்பில் வெளியாகியுள்ள பரபரப்பான தகவல்

நாட்டில் நேற்று மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின்போது 76 பேர் கைது