சூடான செய்திகள் 1

ஐஸ் ரக போதைப்பொருளுடன் இருவர் கைது

(UTV|COLOMBO)  ஐஸ் ரக போதைப்பொருள் மற்றும் கேரள கஞ்சா என்பனவற்றுடன் 2 சந்தேகத்துக்குரியவர்கள் கொலன்னாவை நகர சபையிலிருந்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளதோடு  4 கிராம் ஐஸ் ரக போதைப்பொருளும், 3 கிலோ கேரள கஞ்சாவும் கொலன்னாவை நகர சபையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

அதன்போது, கொலன்னாவை நகர சபை ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

காத்தான்குடி பிரதான வீதியில் டயரிட்டு எரித்த நபர் கைது

இலங்கை மருத்துவ சபைக்கு எதிரான மனுவை விசாரிக்க திகதி குறிப்பு

உணவு ஒவ்வாமை காரணமாக 54 சிறுவர்கள் மருத்துவமனையில்