உள்நாடுபிராந்தியம்

ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது

மட்டக்குளி, கதிரானவத்தை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது அந்தப் பெண் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

சந்தேக நபரிடமிருந்து 52 கிராம் 850 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 02 கிலோ 100 கிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு 15 பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடையவர் என்பதுடன், மட்டக்குளிய பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

நாட்டில் 171,169 PCR பரிசோதனைகள்

பொதுத் தேர்தலில் சஜித்தின் தலைமைக்கு ஜா.ஹெல உறுமய ஆதரவு

சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை