ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF) மற்றும் Solidaridad என்ற சிவில் சமூக அமைப்பானது, ஐரோப்பிய ஒன்றியத்தின் பெருநிறுவன நிலைத்தன்மை தொடர்பில் Due Diligence Directive (CSDDD) குறித்த ஒரு நாள் செயலமர்வை அண்மையில் கொழும்பில் ஏற்பாடு செய்திருந்தது.
2023 இல் அறிமுகப்படுத்தப்பட்ட CSDDD, கடுமையான சுற்றுச்சூழல் மற்றும் மனித உரிமைகள் தரநிலைகளைப் பூர்த்தி செய்ய ஐரோப்பிய ஒன்றியத்துடன் கையாளும் விநியோகச் சங்கிலிகள் தேவை.
இலங்கை விநியோகஸ்தர்கள் இந்தத் தகுதிகளுக்கு நேரடியாக இணங்க வேண்டியதில்லை என்றாலும், இலங்கையின் ஆடை ஏற்றுமதியில் சுமார் 30% பங்கு வகிக்கும் ஐரோப்பிய ஒன்றிய சந்தையில் போட்டியிட இந்த தரங்களுக்கு இணங்குவது அவசியம்.
80% ஏற்றுமதிகள் இத்தாலி, ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு செய்யப்படுவதால், இந்த இணக்கம் இன்னும் முக்கியமானதாக மாறும்.
உள்ளூர் வணிகங்களுக்கு இடர் மதிப்பீடு, நிலைத்தன்மை தரநிலைகள் மற்றும் திறமையான அறிக்கையிடல் பற்றிய செயல் புரிதலை வழங்குவதன் மூலம் அதிகரித்து வரும் உலகளாவிய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதற்கான திட்டத்தை இந்த பயிற்சிப் பட்டறை முன்வைத்தது.
CSDDD தேவைகளைப் பூர்த்தி செய்ய இலங்கை வழங்குநர்களுக்கு வழிகாட்டும் ஒரு மூலோபாய பங்காளித்துவத்தை நிறுவுவதற்கு JAAF மற்றும் Solidaridad ஆகியவற்றுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது.
இந்த ஒத்துழைப்பு, நிலையான ஆதாரங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வர்த்தக நாமங்களுக்கு நம்பகமான விநியோகஸ்தர் என்ற நிலையைத் தக்கவைத்துக்கொள்வதற்கான தொழில்துறையின் திறனை மேம்படுத்த உதவும்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த JAAF இன் திரு. யொஹான் லோரன்ஸ், “உலகளாவிய நியமங்களுக்கு இணங்க நிலைத்தன்மை மற்றும் நெறிமுறை வணிக வெற்றிக்கு இன்றியமையாததாக இலங்கையில் தொடர்ந்து அங்கீகரிக்கப்படுகிறது.
இந்த செயலமர்வு மற்றும் Solidaridad உடனான எமது கூட்டாண்மையானது இலங்கையின் கைத்தொழில்களை மாறிவரும் உலகளாவிய வர்த்தக நியமங்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைப்பதில் ஒரு முக்கியமான படியாகும்.
CSDDD உடன் பணிபுரிவதன் மூலம், உலகளாவிய சந்தையில் ஒரு முன்னணி விநியோகஸ்தராக எங்கள் நிலையைப் பாதுகாக்கும் வாய்ப்பைப் பெறுவோம்.” என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளின் பிரதித் தலைவர் Lars Bredal மற்றும் நெதர்லாந்தின் பிரதித் தூதுவர் Iwan Rutjens உட்பட ஐரோப்பாவிலிருந்து பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டது நிகழ்வின் முக்கியத்துவத்தை தெளிவாகப் பிரதிபலிக்கிறது.
இந்தப் புதிய தரங்களைப் புரிந்துகொண்டு செயல்படுத்துவதற்கு ஆடைத் துறைக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, இந்தத் திட்டத்தின் வெற்றிக்கு ஆதரவளித்த FAAMA இன் செயலாளர் ஷாஹித் சங்கனிக்கு JAAF சிறப்பு நன்றியைத் தெரிவித்தது.
JAAF மற்றும் Solidaridad இந்த சவால்களை எதிர்கொள்வதற்கும் உலக சந்தையில் போட்டித்தன்மையை உறுதி செய்வதற்கும் தேவையான கருவிகளை தொழில்துறைக்கு வழங்குவதன் மூலம் நெறிமுறை மற்றும் நிலையான உற்பத்தியில் முன்னணியில் உள்ள இலங்கையின் சிறப்பை மேலும் முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.