விளையாட்டு

ஐபிஎல் தொடரை ஒருவாரம் தாமதமாக நடத்த தீர்மானம்

(UTV |  சென்னை) – இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தொடரை தள்ளிவைக்க முடியாது என சொல்லிவிட்டதால் பிசிசிஐ ஐபிஎல் தொடரை ஒருவாரம் தாமதமாக நடத்த முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

2021 ஆம் ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் தொடங்கிய நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நிறுத்தப்பட்டது. இதுவரை 29 போட்டிகள் மட்டும் நடத்தப்பட்ட நிலையில் வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஆனால் எப்படியாவது மீதி போட்டிகளை உலகக்கோப்பை டி 20 போட்டிக்கு முன்னர் நடத்த பிசிசிஐ ஆர்வம் காட்டுகிறது. போட்டிகளில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

இதற்காக இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரை ஒருவாரம் முன்னதாக செப்டம்பர் 7 ஆம் திகதி முடிக்க சொல்லி வேண்டுகோள் விடுத்துள்ளது. ஆனால் அதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சம்மதிக்கவில்லை. இந்நிலையில் செப்டம்பர் இறுதியில் இருந்து ஐபிஎல் போட்டிகள் நடக்கும் என்று சொல்லப்படுகிறது. உலகக்கோப்பை போட்டிகள் நெருக்கமாக இருப்பதால் அதிக நாட்களில் இரண்டு போட்டிகளை நடத்தி சீக்கிரமாக முடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

Related posts

இத்தாலி இறுதிப் போட்டிக்குள்

குசல் மெண்டிஸின் சாதனை!

இருபதுக்கு – 20 போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் கொழும்பு அணிக்கு வெற்றி