(UTV | இந்தியா) – இந்தியன் பிரீமியர் லீக் தொடரை இரசிகர்கள் இல்லாமல் நடத்துவது விருந்தினர்கள் இல்லாத திருமணம் போன்றது என முன்னாள் வீரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றால் ஒத்திவைக்கப்பட்டுள்ள ஐபிஎல் தொடரை மீண்டும் நடத்த பிசிசிஐ ஆயத்தமாகி வருகிறது. இரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்த ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இரசிகர்கள் இல்லாமல் போட்டியை நடத்துவது விருந்தினர்கள் இல்லாத திருமணம் போன்றது என முன்னாள் இந்திய அணியின் சகலதுறை ஆட்டக்காரர் இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இர்பான் பதான் தெரிவிக்கையில்;
‘‘விருந்தினர்கள் இல்லாமல் ஒரு திருமணம் முழுமையாகாது. அவ்வாறே இரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டி நடத்தப்பட்டால், நமக்கு அதே உணர்வு ஏற்படும்.
ஆனால், திருமணம் விருந்தினர்கள் இல்லாமலும் நடக்கலாம். நீதிமன்ற திருமணங்கள் போன்ற வாய்ப்புகள் உள்ளன. இறுதியில் திருமணங்கள் நடக்கும். அதுபோன்றுதான் இதுவும் இருக்கும்’’ எனத் தெரிவித்துள்ளார்.