கிசு கிசு

ஐபிஎல் தொடருக்காக தயாராகும் வேகப்பந்து வீச்சாளர்

(UTV|இந்தியா)- கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஐ.பி.எல் தொடர் இரத்தாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில், அதற்காக தயாராகி வருவதாக இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2020 எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த நிலையில், இந்தியாவில் கொரோனாவின் தொற்று அதிகரித்து வருவதால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் சகலத்துரை ஆட்டக்காரர் போட்டி நடைபெறும் என்ற நம்பிக்கையில் தயாராகி வருகிறார்.

இதுகுறித்து பென் ஸ்டோக்ஸ் கூறுகையில் ‘‘தற்போதுள்ள நிலையில் என்னுடைய அடுத்த கிரிக்கெட் தொடர் ஐபிஎல்தான். இதுவரை இதில் மாற்றமில்லை. இதனால் விளையாடுவேன் என்று நினைக்கிறேன்.

ஒருவேளை போட்டி நடைபெற்றால் சிறந்த நிலையில் நான் செல்ல வேண்டும். அதனால் உடற்தகுதியை விளையாடுவதற்கு ஏற்ற வகையில் வைத்திருக்க வேண்டும். என்னால் மூன்று வாரங்கள் ஓய்வில் இருக்க முடியாது. ஏப்ரல் 20-க்குள் உடல் தயாராகி விடும். ஏனென்றால் நான் விரும்பும் அளவிற்கு உடல்நிலை ஒத்துழைக்காது என கூறியுள்ளார்.

Related posts

சஹ்ரான் தொடர்பில் முழுங்கவும் முடியவில்லை, துப்பவும் முடியவில்லை [VIDEO]

இலங்கையில் ஜோன்சன் மற்றும் ஜோன்சன் பேபி பவுடர்களது இறக்குமதிக்கு தடை

இலங்கை விடயங்களை உன்னிப்பாக அவதானிக்கும் நாடு?