விளையாட்டு

ஐபிஎல் தொடரில் முகமது ஷமிக்கு போதுமான அளவு ஓய்வு அளிக்கப்படும்…

(UTVNEWS | INDIA) – 2019ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் முகமது ஷமிக்கு போதுமான அளவுக்கு ஓய்வு அளிக்கப்படும் என கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் மைக் ஹெசன் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடரின்போது அபாரனமான வகையில் பந்து வீசி உலகக்கோப்பைக்கான அணியில் தனது இடத்தை உறுதி செய்து கொண்டார்.

உலகக் கோப்பைக்கும் ஐபிஎல் தொடருக்கும் இடையில் இரண்டு வாரங்கள் மட்டுமே இடைவெளி உள்ளதால், வீரரகள் தங்களது வேலைப்பளு மீது கவனம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம்பிடித்துள்ள முகமது ஷமி தொடர்பில் குறித்த அணியின் பயிற்சியாளர் மைக் ஹெசன் தெரிவிக்கையில்;

‘‘இது குறித்து நாங்கள் ஏற்கனவே கே.எல் ராகுல் மற்றும் முகமது ஷமியுடன் பேசியுள்ளோம். அவர்கள் இருவரும் எங்கள் அணிக்கு மிகப் பெரிய பங்களிப்பை அளிக்கக் கூடியவர்கள். நாங்களும் அவர்கள் மீது கவனம் செலுத்துவோம். தொடர் முழுவதும் மற்ற வீரர்களை போன்று அவர்களையும் நிர்வகிப்போம்.

ஐபிஎல் தொடரில் அவர்கள் ஓய்வு தேவை என்று நினைத்தால், நாங்கள் ஓய்வு அளிப்போம். கூடுதல் பயிற்சி அல்லது போட்டிகள் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் அவர்களுக்கு ஓய்வு தேவைப்படலாம். ஆனால், எத்தனை போட்டிகளில் ஓய்வு கொடுப்போம் என்பதை என்னால் உறுதியாக கூற இயலாது. அணி தொடரில் எவ்வாறு சென்று கொண்டிருக்கிறது என்பதை பார்ப்போம். ஆனால், அவர்கள் இருவரும் எங்கள் அணிக்கு மிகப் பெரிய பங்களிப்பை கொடுப்பார்கள்’’

Related posts

இடியப்பச் சிக்கலுக்கு வருந்துகிறேன் – நாமல்

உலகின் சிறந்த வீரராக முரளி

இலங்கை அணி  2 விக்கட்டுக்களால்  வெற்றி