விளையாட்டு

ஐபிஎல் தொடரில் இருந்து சுரேஷ் ரெய்னா நீக்கம்

(UTV | இந்தியா) – எதிர்வரும் இந்தியன் பிரீமியர் தொடரில் (ஐபிஎல்) தொடரில் சுரேஷ் ரெய்னா விளையாட மாட்டார் என சென்னை சுப்பர் கிங்க்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.

2020 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் எதிர்வரும் 19 ஆம் திகதி தொடங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் உள்பட 8 அணி வீரர்களும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கு சென்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அரபு நாட்டில் உள்ள அனைத்து வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உதவி பணியாளர்கள் உள்பட 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒருவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில்,

“.. தனிப்பட்ட காரணங்களுக்கு சுரேஷ் ரெய்னா இந்தியா திரும்பினார். எனவே அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்கமாட்டார். இதுபோன்ற தருணங்களில் சுரேஷ் ரெய்னா குடும்பத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் துணை நிற்கும்..” எனவும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆசிய றக்பி சம்பியன்ஷிப் போட்டி அடுத்த மாதம் சீனாவில்

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் போட்டி அட்டவணை இதோ…

தென்னாபிரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி