உலகம்

ஐந்து வருடங்களுக்கு பின்னர் மீளவும் எபோலா தொற்று

(UTV |  ஆப்பிரிக்கா) – ஆப்பிரிக்க நாடுகளில் மீளவும் ஏற்பட்டுள்ள எபோலா தொற்று பரவல் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கினியா குடியரசில் எபோலா வைரஸ் தொற்று காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த வைரஸ் தொற்று சுமார் 5 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த நோய் தொற்றின் அறிகுறிகளுடன் உயிரிழந்த ஒருவரின் சடலம் கடந்த பெப்ரவரி முதலாம் திகதி அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, உயிரிழந்த நபரின் சடங்குகளில் பங்குபற்றிய 8 பேருக்கு குறித்த தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்களில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட ஏனையோர் கினியா குடியரசு நாட்டின் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஐ.நாவிற்கு கோரிக்கை விடுத்த சூடான் இராணுவத் தலைவர் !

கொரோனா வைரஸ் – இதுவரை 636 பேர் பலி

முதன்முறையாக ஒரே நேரத்தில் கரை ஒதுங்கிய 460 திமிங்கலங்கள்