உள்நாடு

ஐந்து மாவட்டங்களுக்கு தொடரும் முடக்கங்கள்

(UTV | கொழும்பு) – நுவரெலியா, கம்பஹா, இரத்தினபுரி, கொழும்பு மற்றும் களுத்துறை முதலான 5 மாவட்டங்களின் 9 கிராம சேவகர் பிரிவுகள் தற்போது முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

இதன்படி, நுவரெலியா மாவட்டத்தின், நோர்வூட் பொலிஸ் அதிகார பிரிவில், இன்ஜஸ்றி கிராம சேவகர் பிரிவும், ஹட்டன் பொலிஸ் அதிகார பிரிவில், போடைஸ் தோட்டம் கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கம்பஹா மாவட்டத்தின், கடவத்தை பொலிஸ் அதிகார பிரிவின், எல்தெனிய தேவாலய வீதி மற்றும் ரணவிரு தர்மசிறி மாவத்தை முதலான கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இரத்தினபுரி மாவட்டம் – இரத்தினபுரி பொலிஸ் அதிகார பிரிவின். கங்குல்விட்டி கிராம சேவகர் பிரிவும், இறக்குவானை பொலிஸ் அதிகார பிரிவின், பொத்துபிட்டி வடக்கு கிராம சேவகர் பிரிவும், களவான பொலிஸ் அதிகார பிரிவின் ஹப்புகொட கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்டத்தில், மொரட்டுமுல்ல பொலிஸ் அதிகார பிரிவின், வில்லோர தோட்டம் கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தில், தொடங்கொட பொலிஸ் அதிகார பிரிவின், போம்புவல கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

சேதன பசளை இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

Just Now : வசந்த முதலிகே கைது : களனி பல்கலைக்கழகத்திற்கு அருகில் பதற்றம்

எரிபொருட்களின் விலை அதிகரிப்பு!