உள்நாடு

ஐந்து மாவட்டஙகளில் மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை

(UTV | கொழும்பு) –  நாட்டில் பல பிரதேசங்களில் பெய்துவரும் கன மழையின் காரணமாக 5 மாவட்டஙகளில் மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலி, களுத்துறை, கேகாலை , நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மணசரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக தேசிய கட்டிட ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த அனர்த்த எச்சரிக்கை நாளை மாலை 5.00 மணி வரை ஏற்புடையது என கட்டிட ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மண்சரிவு ஏற்படக்கூடும் என அடையாளங்காணப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் தற்போது பெய்துவரும் மழையுடன் கூடிய கால நிலை தொடர்பாக கூடுதலான கவனத்துடன் செயல்பட வேண்டுமென அந்த நிறுவனம் தெரிவித்தள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related posts

ஊரு ஜுவாவின் உறவினர் கைது

மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்க கூடாது – உதய கம்மன்பில

editor

மேலும் 20 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் தாயகத்திற்கு