சூடான செய்திகள் 1

ஐந்து மாத காலத்திற்குள் எச்.ஐ.வி தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 170

(UTV|COLOMBO)  கடந்த ஐந்து மாத காலப்பகுதியில் எச்.ஐ.வி தொற்றினால் நாட்டில் 170 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை அடையாளம் காணப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சின் தேசிய பாலியல் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் விஷேட வைத்தியர் திருமதி.சந்திரிகா ஜயக்கொடி தெரிவித்துள்ளதுடன் தற்பொழுது நாட்டில் உள்ள எச்.ஐ.வி தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3200க்கும் அதிகமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் அடையாளம் காணப்பட்டுள்ள நோயாளர்களுள் எச்.ஐ.வி தொற்று பாலியல் செயற்பாட்டு காரணமாக ஏற்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

இதற்கு முன்னர் 47 சதவீதமாக இருந்த பாலியல் தொடர்பிலான எயிட்ஸ் நோய் தடுக்கப்பட்டிருப்பதுடன் ஓரினச் சேர்க்கை தொடர்பில் 44 சதவீதமானவை கட்டுப்படுத்தப்பட்டன.

ஆரம்ப காலப்பகுதியில் எயிட்ஸ் நோய் ஆண் பெண் மூலமே பரவியதுடன் தற்பொழுது இந்த நிலை முற்றிலும் மாறுபட்டுள்ளது.

ஓரினச் செயற்கையினால் இது ஆகக் கூடுதலாக அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏனைய நோய்களைப் போன்று நோய் காணப்பட்டவுடன் அதற்கான நோய் இலட்சணங்கள் இதில் வெளிப்படுவதில்லை.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related posts

எல்பிட்டிய தேர்தல் – விசேட பாதுகாப்பு ஒழுங்குகள்

நாட்டின் பல பகுதிகளுக்கும் இன்று அதிக மழைவீழ்ச்சி

நாளை 9 மணி முதல் நீர் விநியோகம் தடை