உள்நாடு

ஐந்து சிறுமிகளில் மூவர் கண்டுபிடிப்பு

(UTV | கொழும்பு) –  கண்டி – வத்துகாமம், மீகம்மன பிரதேசத்தில் உள்ள சிறுவர் புனர்வாழ்வு இல்லத்தில் இருந்து தப்பிச் சென்ற 5 சிறுமிகளில் மூவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சிறுமிகள் அவர்களின் வீடுகளில் தங்கியிருந்துள்ளதுடன், பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னர் அவர்கள் வேறொரு சிறுவர் புனர்வாழ்வு இல்லத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

அத்துடன் ஏனைய இரு சிறுமிகளும் அவர்களின் வீடுகளுக்கு அல்லது உறவினர் வீடுகளுக்கு சென்றிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

இந்த ஐந்து சிறுமிகளும் நேற்று முன்தினம் சிறுவர் இல்லத்திற்கு அருகில் உள்ள பாடசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது தப்பிச் சென்றுள்ளனர்.

அவர்கள், புஸ்ஸலாவை, வத்துகாமம் மற்றும் உடிஸ்பத்துவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 16 முதல் 18 வயதுகளுக்கு இடைப்பட்டவர்கள் என பொலிசார் தெரிவித்தனர்.

Related posts

முடிவுக்கு வந்த ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் விவகாரம்

editor

சிங்கமலை காட்டுப்பகுதியில் தீப்பரவல்

தாடியுடன் பரீட்சை எழுத நீதிமன்றம் உத்தரவு!