உள்நாடு

ஐந்து இலட்சம் சினோபாம் தடுப்பூசிகள் தயார் நிலையில்

(UTV | கொழும்பு) – சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 5 இலட்சம் சினோபாம் தடுப்பூசிகளை கப்பலில் ஏற்றுவதற்கான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

குறித்த தடுப்பூசி தொகை சீன சுங்கப்பிரிவில் சுகாதார பாதுகாப்புடன் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நடவடிக்கை நேற்று நிறைவடைந்ததாக இலங்கையிலுள்ள சீன தூதரகம் தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

அத்துடன் இலங்கைக்கு 5 லட்சம் சினோபாம் தடுப்பூசிகளை விரைவாக வழங்குவதற்காக 24 மணிநேர உற்பத்தி சேவைகள் இடம்பெற்றதாகவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த தடுப்பூசிகள் அடுத்த வாரம் இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

Related posts

ஆயுதப்படையினர் நினைவு தினம் மற்றும் பொப்பி மலர் தின நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது!

மூடப்பட்ட “சதோச” கிளைகளை மீண்டும் திறவுங்கள் – அஷ்ரப் தாஹிர் எம்.பி வேண்டுகோள்.

editor

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 587 பேர் கைது