சூடான செய்திகள் 1

ஐந்தாம் தர புலமைபரிசில் தொகை 750 ரூபாயாக அதிகரிப்பு

(UTV|COLOMBO)-தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களில், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இதுவரைக்காலம் வழங்கப்பட்டுவந்த, புலமைப்பரிசில் தொகையை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதுவரைக்காலம் மாதம் ஒன்றுக்கு ரூ.500 வழங்கப்பட்டுவந்ததுடன், இந்த தொகையை 750 ரூபாயாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி சித்தியடைந்த, விசேட தேவையுடைய 250 மாணவர்களுக்கு, புலமைப்பரிசில் நிதியை வழங்குவதற்காக, அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கும் அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

“சமையல் எரிவாயுவின் விலையை உடனடியாக அதிகரிக்க இடமளிக்கமாட்டோம்”- அமைச்சர் ரிஷாட் திட்டவட்டமாக அறிவிப்பு!

25 வகை மருந்துகளுக்கான விலை குறைப்பு-அமைச்சர் ராஜித

அதிபர் வெற்றிடங்கள், ஜனவரி மாத இறுதிக்குள் நிவர்த்தி