விளையாட்டு

ஐசிசி தரவரிசை பட்டியலில் முகமது நபிக்கு முதலிடம்

(UTV |  துபாய்) – டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான துடுப்பாட்டம், சகலதுறை ஆட்டக்காரர் மற்றும் பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

இதில், சகலதுறை ஆட்டக்காரர்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் முகமது நபி உள்ளார். 2-வது இடத்தில் வங்காளதேச அணியின் கேப்டன் சாகிப் அல் ஹசன் நீடிக்கிறார். 3-வது இடத்தில் இங்கிலாந்து வீரர் மொயின் அலி உள்ளார்.

அதேபோல், துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதல் இடத்திலும், ரிஸ்வான் 2-வது இடத்திலும் உள்ளனர். இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் இந்த பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளார்.

அதேபோல், பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் ஜோஷ் ஹேசில்வுட் உள்ளார். 2-வது இடத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஷம்சி உள்ளார். 3-வது இடத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ரஷித் கான் நீடிக்கிறார். இந்த பட்டியலில் இந்திய வீரர் புவனேஸ்வர் குமார் 8-வது இடத்தில் உள்ளார்.

Related posts

ஜேர்மனியிடம் மண்ணை கவ்விய போர்ச்சுக்கல்

நுவான் துஷாரவுக்கு கொவிட் உறுதி

ஆசிய பளு தூக்கும்போட்டியில் பதக்கங்களை வென்ற போட்டியாளர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு