அரசியல்உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தி பதவி நிலைகளில் மாற்றம்

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி ஆகியவற்றின் பிரதான பதவி நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி புதியவர்களை அப்பதவிகளுக்கு நியமிக்க ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச இன்று (27) நடவடிக்கை எடுத்தார்.

இதன் பிரகாரம், 2024 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ இம்தியாஸ் பாக்கீர் மாக்கர் அவர்களும், 2024 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளராக கேகாலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கபீர் ஹாசிம் அவர்களும், ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்டத் தலைவர் பதவிக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஹர்ஷன ராஜகருணா அவர்களும் இன்று (27) ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச அவர்களால் நியமிக்கப்பட்டனர்.

Related posts

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவிப்பு

ரூ.5,000 கொடுப்பனவு வழங்கும் சேவையிலிருந்து கிராம உத்தியோகத்தர்கள் விலகல்

அங்கொட லொக்காவின் மற்றுமொரு சகா பலி