உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தியுடன் அரசியல் கூட்டணி வைத்துக் கொள்ளப் போவதில்லை – UNP

ஐக்கிய மக்கள் சக்தியுடன் அரசியல் கூட்டணி வைத்துக் கொள்ளப் போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசியக் கட்சி ஆதரிக்கும் என்ற தகவல்களில் உண்மையில்லை என கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தனது வேட்பாளர் ஒருவரை களமிறக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த எவரேனும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துகொள்ள விரும்பினால் இணைய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், ஐக்கிய தேசியக் கட்சியின் எந்தவொரு உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொள்ளப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் எந்தவொரு பதவியையும் ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளமாட்டார் எனவும், தேர்தல் வெற்றியின் பின்னர் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் ஜனாதிபதியினால் வழங்கப்படும் பதவிகளை ஏற்றுக்கொள்வார்கள் எனவும் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

Related posts

சம்பந்தன் பதவி விலக வேண்டும் – சுமந்திரன் கோரிக்கை.

மொட்டு வேட்பாளராக தம்பிக்க: ஆனால் 10 நிபந்தனைகள்

தெதுருஓயா பகுதியில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கொலை