உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்த சமல் சஞ்சீவ!

(UTV | கொழும்பு) –

உயர் கல்வித் தகுதிகளுடன் பிரதேச சுகாதாரத் துறையில் சிறப்பாக பணியாற்றிக் கொண்டு,ஊழலுக்கு எதிரான பயணத்தில் முன்னோடியாக செயற்பட்டமையினால் தனது தொழிலை இழந்த விசேட வைத்திய நிபுணரான சமல் சஞ்சீவ,ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டமை மகிழ்ச்சியான விடயம் என்றும்,அரச ஊழியராக இருந்த சமல் சஞ்சீவ,சுகாதாரத்துறையில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை வெளிப்படுத்தியதன் காரணமாக அவர் தனது வேலையை இழந்தார் என்றும்,

அதைரியப்படாது ஊழலுக்கு எதிரான பயணத்தை வலுப்படுத்தும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் அவர் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சியடைவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இந்த ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் மூலம் ராஜபக்சர்கள் உட்பட நாட்டை வங்குரோத்து நிலைக்கு இட்டுச் செல்ல காரணமான நபர்களை வெளிக்கொணர முடிந்ததாகவும், இதன் மூலம் சுகாதாரத்துறையில் இடம்பெற்ற ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைக்க முடிந்ததாகவும்,இதன் மூலம் பல புதிய தகவல்களை வெளிக்கொணர முடிந்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இந்நாட்டில் ஊழலையும் மோசடியையும் ஒழிக்கவே ஐக்கிய மக்கள் சக்தி பாடுபட்டு வருவதாகவும்,வைத்திய கலாநிதி சமல் சஞ்சீவ இன்று முதல் அந்தப் பயணத்தின் முன்னோடித் தலைவராக செயற்படுவார் என்றும், இத்துறையில் சிறந்த தகுதிகள் அவருக்கு இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இந்த ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் மூலம் நாட்டிலிருந்து திருடப்பட்ட இதுவரை அகப்பட்ட பணமும் வளங்களும் நாட்டுக்கு மீளப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று  தெரிவித்தார்.

விசேட வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி சமல் சஞ்சீவ,ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து, ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் இணைந்து கொள்ளும் நிகழ்வில் கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களால் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்த ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் உப தலைவராகவும்,ஐக்கிய மக்கள் சக்தியின் சுகாதார கொள்கைகள்  குழுவின் செயலாளராகவும் வைத்தியர் சமல் சஞ்சீவ நியமிக்கப்பட்டார்.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தடுப்பூசி ஏற்றும் திட்டம் ஆரம்பம்

பாராளுமன்றம் கூடியது [நேரலை]

ஜீவன் தொண்டமானால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு முழு ஆதரவு – அமெரிக்க விசேட பிரதிநிதி உறுதி