அரசியல்உள்நாடு

ஐக்கிய மக்கள் கூட்டமைப்புடன் இணைந்தே போட்டி – ரிஷாட் பதியுதீன்

திருகோணமலை மாவட்டத்தில் இம் முறை எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்புடன் இணைந்தே போட்டியிடும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

கிண்ணியா விசன் மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (27) மாலை இடம் பெற்ற மாவட்ட மத்திய குழு கூட்டத்தின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

அம்பாறை புத்தளம் மாவட்டங்களிலும் தனித்து போட்டியிட வேண்டும் என உயர் பீட உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

நாளை அம்பாறை மாவட்ட மத்திய குழுவை கூட்டி தீர்மானங்களை மேற்கொள்வோம்.

குறித்த மத்திய குழு கூட்டத்தில் மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் அப்துல்லா மஹ்ரூப், உயர் பீட உறுப்பினர் வைத்தியர் ஹில்மி முகைதீன் பாவா மற்றும் கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Related posts

நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

editor

பாடசாலைகளின் விடுமுறை தொடர்பில் கல்வியமைச்சின் அறிவிப்பு!

மாணவர்கள் தொடர்பாக பொலிஸ் மா அதிபரின் பணிப்புரை!