சூடான செய்திகள் 1

ஐக்கிய தேசிய கட்சியால் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை

(UTV|COLOMBO)-இன்று(27) பிற்பகல் 1.00 மணிக்கு சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற அமர்வு கூடவுள்ளது.

பாராளுமன்ற அமர்வின் போது ஐக்கிய தேசிய கட்சியால் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை முன்வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியுடன் சுற்றுலா தொழிற்துறை சரிந்துள்ளமை தொடர்பில் அந்த ஒத்திவைப்பு வேளை பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லகஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

எனினும் இதில் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்வார்களா? இல்லையா? என்பது தொடர்பில் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இது தொடர்பில் இன்று இடம்பெறவுள்ள பாராளுமன்ற குழு கூட்டத்தின் பின்னர் அறிவிக்கவுள்ளதாக அவைத்தலைவர், அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

உலக நீர் தினம் 2018

கண்டி நகரத்தில் புதிய போக்குவரத்து வாகனத் திட்டம்

பிரபல சிங்கள பாடகர் பிணையில் விடுதலை