கிசு கிசு

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் தெரிவு

(UTVNEWS COLOMBO)- ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று மாலை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இதில் சஜித்தை வேட்பாளராக களமிறக்க ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒப்புக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

பாகிஸ்தான் T-20 கிரிக்கெட் போட்டிகளுக்கான ஸ்பான்சர் நிதியுதவி நிறுத்தம்

கோட்டாபயவுக்கு மாலைதீவு மக்களால் எதிர்ப்பு

ஹெலிகாப்டரில் இருந்து குதித்து சைக்கிள் சாகசம்