சூடான செய்திகள் 1

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-இன்று நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இன்று மத்திய செயற்குழு கூட்டம் நடைபெறவிருந்தது.

கடந்த 21 ஆம் திகதி நடைபெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தின் போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

ருவன் விஜேவர்தன குழுவின் அறிக்கை தொடர்பில் கலந்துரையாடப்பட வேண்டும் என அன்றைய தினம் அமைச்சர் எரான் விக்ரமரத்ன குறிப்பிட்டார்.

அதற்கமைய, இன்று மாலை 5 மணிக்கு ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தை நடாத்தத் தீர்மானிக்கப்பட்ட போதும், கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜே.சீ. அலவலத்துவல தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

ரணிலை நேரில் சந்தித்து, இறுதி தீர்வு கட்டப்போகும் சம்மந்தன்!

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு (UPDATE) 

கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது