சூடான செய்திகள் 1

ஐக்கிய தேசியக் கட்சியின் மக்கள் கூட்டம் கொழும்பிற்கு…

(UTV|COLOMBO)-கிடைக்காமல் போன ஜனநாயகத்தை சரியான முறையில் வென்றெடுப்பதற்காக இன்று (17) நண்பல் காலி முகத்திடலில் பாரிய மக்கள் கூட்டமொன்றை நடாத்தவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவிப் பிரமாணம் செய்த போது எந்தவொரு ஊடக நிறுவனத்துக்கும் செய்தி சேகரிக்க அனுமதி மறுக்கப்பட்டது. இந்த மறுக்கப்பட்ட ஜனநாயகத்தை முழுமையாக பெற்றுக் கொடுப்பதற்காக இன்று காலி முகத்திடலில் லட்சக்கணக்கான மக்களை நிரப்பவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தக் கூட்டத்துக்கு வருமாறு ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் மற்றம் நாட்டில் ஜனநாயகத்துக்காக உழைத்த சகல தரப்பினரையும் அழைப்பு விடுக்கின்றேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

Related posts

சுதந்திர தினம் இம்முறை தேசிய தினமாக கொண்டாடப்படவுள்ளது

இன்றைய வானிலை….

“ஒற்றுமையின் மூலம் சமூகத்திற்கெதிரான சதிகளை முறியடிப்போம்” மாவடிப்பள்ளியில் அமைச்சர் ரிஷாட்!