உள்நாடு

ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி த‌லைவ‌ரை அச்சுறுத்தியவர்கள் மீது முறைப்பாடு

ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி த‌லைவ‌ர் முபாறக் அப்துல் மஜித் தனது கட்சியில் இருந்து விலக்க‌ப்ப‌ட்ட‌  இருவருக்கு எதிராக முறைப்பாடுகளை மேற்கொண்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில்  புத்தளம் மாவட்டத்தில் இருந்து ஐக்கிய‌ காங்கிர‌ஸ்   கட்சியின் உப‌ த‌லைவ‌ராக‌ இருந்த‌   எம்.எஸ்.எம் சப்வான் என்பவருக்கு எதிராக  முறைப்பாடு செய்துள்ளார். இம்முறைப்பாட்டில் தனது கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மேற்குறித்த நபர் பின்னர்  கட்சியின் பெயரை பயன்படுத்தியும் தற்போதைய செயலாளர் தான் என கூறி கட்சி தொடர்பான  அறிக்கைகளை வெளியிடுவதாகவும் சமூக ஊடகங்களை பயன்படுத்தி ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி த‌லைவ‌ர் முபாறக் அப்துல் மஜித் இல்லை என கூறி   தனது பெயருக்கும் க‌ட்சிக்கும் களங்கம் ஏற்படுத்துவதாகவும் தெரிவித்து முறைப்பாடு மேற்கொண்டுள்ளார்.
மேலும் ஐக்கிய‌ காங்கிர‌ஸ்  கட்சியின்  பிர‌தி தலைவராக சிறிது காலம் செயற்பட்டு  பின்னர் ஒழுக்காற்று நடவடிக்கை ஊடாக  நீக்கப்பட்ட ஏறாவூர் பகுதியை சேர்ந்த மௌலவி  சி.எம். மழ்ஹர்தீன் தொடர்பில் பாதுகாப்பு  அமைச்சில்  ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி த‌லைவ‌ர்  முபாற‌க் அப்துல் ம‌ஜீத் முறைப்பாடு அளித்துள்ளார். அந்த முறைப்பாட்டில் முகநூலில் தன்னை பற்றி போலியாக முகப்பக்கங்களை  உருவாக்கி கட்சி நடவடிக்கைகளை சீர்குலைப்பதாகவும் தன்னையும் க‌ட்சியை அழிப்பேன் என‌  அச்சுறுத்துவதாகவும் அம்முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை உல‌மா க‌ட்சியின் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் க‌ட்சியில் இருந்து நீக்க‌ப்ப‌ட்டுவிட்ட‌தாக‌ போலி பேஸ்புக் ஐடீக்க‌ள் சொல்கின்ற‌ன‌. எனினும் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி ம‌ர‌ணிக்கும் வ‌ரை அவ‌ரை உல‌மா க‌ட்சியின் த‌லைமை ப‌த‌வியில் இருந்து நீக்கும் அதிகார‌ம் எவ‌னுக்கும் இல்லை என அக்க‌ட்சி  குறிப்பிட்டுள்ளது.
பாறுக் ஷிஹான்

Related posts

சிறைச்சாலைகளில் செனிடைசர் திரவங்களுக்கு தடை

சில அரசியல்வாதிகள் நாட்டை விட்டு வெளியேற தீர்மானம்

ஒத்திவைக்கப்பட்ட கிரிக்கெட் வழக்கு!