வகைப்படுத்தப்படாத

ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு 160 ஏவுகணைகளை விற்பனை செய்ய அமெரிக்கா தீர்மானம்

(UDHAYAM, COLOMBO) – ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு 160 ஏவுகணைகளை விற்பனை செய்ய அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணைகளை சுமார் 200 கோடி அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா இணங்கியுள்ளதாக பெண்டகன் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு துறையினால் விடுக்கப்பட்ட அறிக்கையில், ஐக்கிய அரபு இராச்சியத்தினால் பல ரக ஏவுகணைகள் மற்றும் ஏனைய இராணுவ உபகரணங்கள் உள்ளிட்டவை கோரப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு ராச்சியத்திற்கு இடையேயான ஒப்பந்தம் வெளிவிவகார உறவு மற்றும்  தேசிய பாதுகாப்பு உள்ளிட்டவற்றை மேம்படுத்த உதவும் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

விமலின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

Ten FR petitions filed against death penalty

பெட்ரோல் விலை உயர்வு