உள்நாடு

ஏ9 வீதியில் வாகன விபத்து; நால்வர் படுகாயம்

(UTV | கொழும்பு) -மாங்குளம் பணிக்கநீராவி, ஓமந்தை ஏ9 வீதியில் வேன் மற்றும் லொறி என்பன மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அனுராதபுரத்திலிருந்து கிளிநொச்சிக்கு சென்ற வானும் யாழில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த லொறியுமே நேருக்குநேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சமூகப் பாதுகாப்பு நிதியத்துடன் மனிதாபிமான உணர்வுடன் இணையுங்கள்

அவுஸ்திரேலியாவில் இருந்த 272 பேர் நாடு திரும்பினர்

நெல் கொள்வனவுக்கான விலையில் திருத்தம்