வகைப்படுத்தப்படாத

ஏவுகணை சோதனைகளை நிறுத்தினால் வடகொரியாவுடன் பேச அமெரிக்கா தயார்

(UDHAYAM, COLOMBO) – அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணை சோதனைகளை நிறுத்தினால் வடகொரியாவுடன் பேச அமெரிக்கா தயாராக இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தின் பின்னர், கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்ததாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இதேவேளை, வடகொரியா மீதான புதிய பொருளாதாரத் தடைகளை நீக்க ஐக்கிய நாடுகள் சபை பரிசீலிக்கும் என்றும் ஹாலே தெரிவித்துள்ளார்.

மேலும் வொஷிங்டன் மற்றும் பீஜிங் இராணுவ நட்பு மற்றும் தூதரக இணைப்பு மூலம் வடகொரியாவின் மீது புதிய தடைகளை விதிக்க திட்டமிட்டு வருவதாகவும் அமெரிக்க பிரதிநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

போதைப்பொருட்களுடன் நபரொருவர் கைது

Met. forecasts light showers in several areas

கொழும்பு குப்பை கூழங்கள், பிலியந்தலைக்கு