உலகம்

ஏமன் நாட்டின் மீது சவூதி கூட்டுப்படையினர் தாக்குதல்

(UTVNEWS | YEMEN ) – ஏமன் நாட்டில் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படையினர் நடத்திய விமானத் தாக்குதலில் பொது மக்கள் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஏமனில் செயல்படும் ஹவுதி கிளர்ச்சிபடையினருக்கு ஈரான் நாடும், அரசு படையினருக்கு சவூதி அரேபியா தலைமையிலான கூட்டணி படையினரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

அல் ஜாவ்ப் மாகாணத்தில் பறந்த சவூதி அரேபியா போர் விமானங்களில் ஒன்றை ஹவுதி கிளர்ச்சி படையினர் வெள்ளிக்கிழமை சுட்டுவீழ்த்தினர். இதுதொடர்பான வீடியோவையும் கிளர்ச்சி படையினர் வெளியிட்டிருந்தனர்.

இதற்கு பதிலடியாக ஏமனில் ஹவுதி கிளர்ச்சிபடையினர் கட்டுப்பாட்டிலுள்ள அல் ஹய்ஜா (Al-Hayjah) பகுதி மீது சவூதி அரேபியா கூட்டணி படையினர் நேற்று விமானத் தாக்குதல் நடத்தினர். இதில் அப்பாவி மக்கள் 31 பேர் பலியானதாகவும், 12 பேர் காயமடைந்ததாகவும் ஹவுதி கிளர்ச்சி படையினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

 கொரோனா வைரஸ் காரணமாக  சிங்கப்பூரின் பொருளாதாரம் வீழ்ச்சி

ரஷ்யாவில் சேவையை நிறுத்தியது Visa,MasterCard நிறுவனங்கள்

முன்னாள் சோவியத் தலைவர் மிகைல் கோர்பச்சேவ் உயிரிழப்பு