வகைப்படுத்தப்படாத

ஏமனில் 3 வருடங்களில் 85,000 குழந்தைகள் பலி!

(UTV|YEMAN)-ஏமனில் கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வரும் போரின் போது மட்டும், கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாக ஐந்து வயதிற்குட்பட்ட சுமார் 85,000 குழந்தைகள் உயிரிழந்திருக்கலாம் என்று மதிப்பீடுகள் தெரிவிப்பதாக முன்னணி தொண்டு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

ஏமனில் உயிரிழந்துள்ள குழந்தைகளின் எண்ணிக்கை, பிரிட்டனின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான பர்மிங்ஹாமிலுள்ள ஒட்டுமொத்த 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கைக்கு சமம் என்று ´சேவ் தி சில்ரன்´ என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

ஏமனில் அதிகபட்சம் 14 மில்லியன் மக்கள் பஞ்சத்தின் பிடியில் சிக்கியுள்ளதாக கடந்த மாதம் ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்திருந்தது.

உலகிலேயே மோசமான மனிதாபினாம நெருக்கடியாக கருதப்படும் 3 ஆண்டுகளாக நடந்து வரும் ஏமன் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு ஐ.நா சபை முயற்சித்து வருகிறது.

 

 

 

 

Related posts

California hit by biggest earthquake in 20-years

டெங்கு நோய்த் தாக்கம் அதிகரிப்பு

பல மாகாணங்களில் மழையுடனான காலநிலை