உள்நாடு

ஏப்ரல் 3ம் திகதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க தீர்மானம் இல்லை

(UTV | கொழும்பு) – எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மிரிஹான ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில், ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லை.

பெங்கிரிவத்தையில் போராட்டம் வெடித்ததை அடுத்து பொலிஸார் நேற்று (31) இரவு ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்தி, இன்று அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சம்பந்தன் – கிழக்கு ஆளுநர் சந்திப்பு

பாகிஸ்தானுக்கு நல்லெண்ண விஜயம் ஒன்றை மேற்கொண்ட பெளத்த பிக்குகள் தூதுக்குழு நாடு திரும்பினர்

“ரணிலின் வரவு-செலவுத்திட்டத்திற்கு ஹக்கீம் புகழாரம்”