கேளிக்கை

எஸ்.பி. இனது மனைவிக்கும் கொரோனா

(UTV | இந்தியா) – ஏற்கனவே கொரோனா தொற்றால் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தனியார் மருத்துவமனையொன்றில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், அவரது மனைவி சாவித்திரிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, தற்போது அதி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ள எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு செயற்கை சுவாசத்தின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு, கடந்த 5 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உடல்நிலை நேற்றிரவு மோசமடைந்ததுள்ளமையும் குறிப்பிடத்தது.

Related posts

NETFLIX இனது அதிரடித் தீர்மானம்

பொப்பிசை சக்கரவர்த்தி ஏ.ஈ. மனோகரன் காலமானார்

படமாகும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு