உள்நாடு

எவ்வித முன்னறிவித்தலுமின்றி முடக்கப்படும் சாத்தியம் அதிகம்

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றாளர்கள் அதிகமாக அடையாளம் காணப்படும் பொலிஸ் பிரிவுகள், கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் , எவ்வித முன்னறிவித்தலுமின்றி முடக்கப்படுமென, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவி்த்துள்ளார்.

எனவே இந்நிலைக்கு முகம் ​கொடுக்க மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்றார்.

இதற்கு முன்னர் முன்னறிவித்தல் வழங்கப்பட்டு பிரதேசங்கள் முடக்கப்பட்டதென்றும் ஆனால் தற்போதைய ​தொற்று அதிகரிப்பின் காரணமாக எவ்வித அறிவிப்பும் இன்றி முடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் நாட்டை முழுமையாக முடக்க எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

விசேட தேடுதலில் 1,481 பேர் கைது

உறங்கிக் கொண்டிருந்த தந்தையை கொடூரமாக கொலை செய்த மகன்

editor

கட்சிக்கோ – தலைமைக்கோ எழுதாதீர் : சமுகத்துக்காக இனி எழுதுங்கள் – ரிஷாத்