உள்நாடு

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையில் சிறுபான்மையினருக்கு அநீதியிழைக்கப்படக் கூடாது

(UTV | கொழும்பு) – எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையில் சிறுபான்மையினருக்கு அநீதியிழைக்கப்படக் கூடாது

  ஆணைக்குழு தலைவருடனான சந்திப்பில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். “எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையில் சிறுபான்மையினருக்கு அநீதியிழைக்கப்படக் கூடாது” – ஆணைக்குழு தலைவருடனான சந்திப்பில் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் வலியுறுத்து!
உள்ளூராட்சி நிறுவனங்களின் வட்டார எல்லை நிர்ணயத்தை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவை, மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கொழும்பில் (19) சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதன்போது, எல்லை நிர்ணயம் தொடர்பில் நாடளாவிய ரீதியில், மக்கள் காங்கிரஸ் கட்சியினால் நடாத்தப்பட்ட கலந்துரையாடல்களின் பின்னர், பொதுமக்களினாலும் பொது அமைப்புக்களினாலும் எல்லை நிர்ணய திருத்தம் சம்பந்தமாக, தமது கட்சிக்கு வழங்கப்பட்ட கோரிக்கைகள் அடங்கிய ஆவணத்தை, ஆணைக் குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிடம் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் கையளித்தார்.
அத்துடன், கடந்த முறை இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது, தேர்தல் முறையிலே குளறுபடிகள் இருந்ததினால், அந்தத் தேர்தல் முறையானது பாரிய தோல்வியை ஏற்படுத்தியது எனவும் ஆணைக் குழுவின் தலைவரிடம் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் சுட்டிக்காட்டினார்.
இனிவரும் காலங்களிலும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை அரைவாசியாக குறைக்கும் பட்சத்தில், சமூக ரீதியான மற்றும் இனரீதியான பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படும் எனவும் தெரிவித்த அவர், இதன் காரணமாக பாரிய சவால்ககளை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, பழைய விகிதாசார முறைப்படி தேர்தலை நடத்த வேண்டும் எனவும், அவ்வாறு நடத்துகின்ற பட்சத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையிலும் எதிர்பார்க்கின்ற அளவிலான குறைப்பை செய்ய முடியும் எனவும் எடுத்துரைத்தார்.
பழைய விகிதாசார தேர்தல் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே தமது கட்சியின் இறுதி நிலைப்பாடு எனவும், அதற்குரிய சிபாரிசை எல்லை நிர்ணய ஆணைக் குழு அரசாங்கத்திடம் முன்வைக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்த மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட அனுமதிக்க வேண்டாம் எனவும் எல்லை நிர்ணய ஆணைக் குழுவின் தலைவரிடம் கோரிக்கை விடுத்தார்.
இந்த சந்திப்பில், எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் உறுப்பினர் ஹமீட் மற்றும் மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் அப்துல்லாஹ் மஹ்ரூப் ஆகியோரும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட கலந்துரையாடல் இன்று

தமிழ் வாக்காளர்கள் தமிழ் வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்குகளை வழங்க வேண்டும் – மனோ கணேசன்

editor

பொலிஸ் மா அதிபர் பிரச்சினைக்கு தீர்வை கூறிய ஜனாதிபதி ரணில்.