உள்நாடுபிராந்தியம்

எல்பிட்டிய பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் வைத்தியசாலையில்

எல்பிட்டிய ஊரகஸ்மன்ஹந்திய பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த நபர் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெலிகஸ்ஹேன பாடசாலைக்கு பின்னால் வீடொன்றுக்கு அருகில் முச்சக்கரவண்டியில் வந்த சிலர் துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊரகஸ்மன்ஹந்திய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

எரிபொருள் விலை உயர்த்தப்பட்டால் பேருந்து கட்டணம் அதிகரிக்கலாம்

DNA அறிக்கைகளை வெளியிடுவதில் சிக்கல்

மான் பலமாக பாய்ந்து ஆட்சியைக் கைப்பற்றும் – வேட்புமனு தாக்கல் செய்த தமிழ் மக்கள் கூட்டணி

editor