சூடான செய்திகள் 1

எல்பிட்டிய தேர்தல் – தபால் மூல வாக்களிப்பு நாளை

(UTVNEWS|COLOMBO) – எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நாளை(27) நடைபெறவுள்ளது.

நாளை தபால் மூலம் வாக்களிக்க முடியாதவர்கள் எதிர்வரும் 4ஆம் திகதி வாக்களிப்பதற்கு மேலதிக சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன,

தபால் மூல வாக்களிப்பிற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதுடன், இதற்குத் தேவையான முழுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காலி மாவட்ட ​பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் K.U. சந்திரலால் தெரிவித்துள்ளார்

இதேவேளை, எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் எதிர்வரும் 11ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யுத்தத்தை முடிவு செய்தது யார்? எவ்வாறு?-இந்நாட்டிலுள்ள சிறிய பிள்ளைகள் நன்கு அறியும்…

தேர்தல் மாவட்டங்களுக்காகத் தெரிவுசெய்யப்படவிருக்கும் பிரதிநிதிகளின் எண்ணிக்கை

மட்டக்களப்பு, திருகோணமலை மக்களின் இயல்பு நிலை பாதிப்பு